ஈரோடு மே 23
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது தாளவாடி சென்னிமலை நம்பியூர் உள்பட ஒரு சில இடங்களில் கடுமையான மழையும் பெய்து உள்ளது இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளம் குட்டைகள் நிரம்பி வருகின்றன
நம்பியூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளான வேமாண்டம் பாளையம் குளத்துப்பாளையம் பிலியம்பாளையம் செட்டியம்பதி சந்தனநகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன இதில் செட்டியம்பதி குளம் நிரம்பும் தருவாயில் உள்ளது எலத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள 100 ஏக்கர் அளவிலான குளம் தற்போது நிரம்பி உள்ளது கடந்த 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தக் குளம் தனது முழு கொள்ளளவையும் எட்டி உள்ளது
இதே போல பெருந்துறை அடுத்த சீனாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆயிகவுண்டம் பாளையம் குட்டை ஒரே நாள் மழையில் 75 சதவீதம் நிரம்பி உள்ளது குள்ளம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் குட்டையும் மழை வெள்ளத்தால் நிரம்பி வருகிறது விஜயபுரி ஊராட்சிக்குட்பட்ட மலையான் குட்டை கள்ளியம்புதூர் செல்லும் வழியில் உள்ள 7 ஏக்கர் பரப்பிலான மொடவாண்டி குட்டை மற்றும் கைக்கோள பாளையம் செல்லும் வழியில் உள்ள 17 ஏக்கர் பரப்பிலான ராசான் குட்டை ஆகிவையும் ஒரே நாள் மழையில் நிரம்பிவிட்டன
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பள்ள ஓடை பிச்சைக்காரன் பள்ளம் ஓடை சுண்ணாம்பு ஓடை போன்ற ஓடைகளுக்கு குறுக்கே கட்டப்பட்டு உள்ள தடுப்பணைகள் நிரம்பின சூரம்பட்டி அணைக்கட்டில் மழை வெள்ளத்தால் தண்ணீர் தேங்கி இருக்கிறது ஈரோடு அருகே உள்ள வள்ளி புரத்தான் பாளையம் தடுப்பணை நிரம்பி வழிகிறது கோடை மழை பெய்து குளம் குட்டைகள் நிரம்பி வருவதால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இதனால் மானாவாரி சாகுபடிக்கு தயாராகி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்