மதுரை ஆரப்பாளையம் தென்கரை சாலையில் அமைந்துள்ள புதிய
அப்காட் எலக்ட்ரிக் (பேட்டரி) வாகன விற்பனை புதிய நிறுவன திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய
ஷோரூமை இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி திறந்து வைத்து
ஆட்டோ விற்பனையை துவக்கி வைத்தார். பாரத ஸ்டேட் வங்கி தலைமை மேலாளர் எல். அமித்தேஷ் குமார் குத்து விளக்கேற்றி வைத்தார். மூன் டிரேடர்ஸ், குளோபல் எஸ்டி இன்டர்நேஷனல் பி.லிமிடெட் இயக்குநர் ஐ. அபுபக்கர் சித்திக்,
காசிம் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ் பி லிட் நிர்வாக இயக்குநர் ஏ. சாகுல் ஹமீது,
உடன் மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் துணைத் தலைவருமான S. M. F. முன்ஷி, மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் S. A. லியாகத் அலி உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர். அப்காட் எலக்ட்ரிக் (பேட்டரி) வாகன விற்பனை நிறுவன இயக்குனர் எம் அப்துல் மாலிக் கூறுகையில் மதுரையை மாசில்லாத மதுரையாக உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு இந்த பேட்டரி வாகன விற்பனை நிறுவனத்தை துவங்கியுள்ளோம் எங்களிடம் ஆட்டோ இருசக்கர வாகன மற்றும் மூன்று சக்கர லோடு வாகனங்கள் அனைத்தும் பேட்டரி முறையில் இயங்கக்கூடிய வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். குறிப்பாக மதுரையில் பேட்டரி ஆட்டோக்களை இயக்குவதற்கான உரிமத்தை முதன் முதலில் நாங்கள் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் அதேபோல் மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பத்தை சேர்ந்த நபர் ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால்
அவர்களுக்கு 35 சதவீத மானியத்தில் ஆட்டோவை வழங்குகிறார்கள். அதேபோல் அரசு இவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகின்றது அதையும் பெற்று கொடுப்பதற்கான ஆவணங்களை தருகிறார்கள். தொடர்ந்து நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை வழங்கினார்கள்.