அரியலூர், அக்;09
அரியலூர் மாவட்டம், செந்துறை முதல்நிலை ஊராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து வட்டாட்சியர் அலுவலகம் பிரிவு சாலை வரை உள்ள முதன்மைச் சாலையின் இருபுறமும் உள்ள வீதிகளில் வசிக்கும் மக்கள் பகுதிக்கு “கணியன் பூங்குன்றனார் நகர்” என்று பெயர் வைக்கப்பட்டு பெயர் பலகையை சிறப்பு அழைப்பாளர் தலைவர் செல்லம் கடம்பன் திறந்து வைத்தார் . இதற்கான ஏற்பாடுகளை உ.ச. இராமசாமி DGM BSNL Rtd அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்டு இந்நிகழ்ச்சி முனைவர் முருகேசன் பேராசிரியர் (பணி நிறைவு) செந்துறை அவர்களின் தலைமையில், புலவர் வை. அய்யம்பெருமாள் உதவி கல்வி அலுவலர் (பணி நிறைவு) செந்துறை வாழ்த்துரை வழங்கியும், இந்நிகழ்ச்சியினை செ.வெ.கடம்பன் தமிழ்ச்சங்க தலைவர், அஞ்சை மகா. ராவணன் தலைமை ஆசிரியர், எழுத்தாளர் தா. மதியழகன், எழுத்தாளர் வே.குமரவேல், கவிஞர் எம்.எஸ்.மதுக்குமார், ஓவியக் கவிஞர் க. அன்புச் சித்திரன், ஓவியர் ப. முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தும். பெயர் பலகை துவக்கமாக துணை மேலாண்மை அலுவலர் (பணி நிறைவு) மா. அப்பாவு அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியின் அழைப்பின் மகிழ்வில் கலந்து கொண்ட தோழர்கள் சந்திரகாசன், மணிவண்ணன், மோகன்ராஜ், குணசேகரன், செந்துறை நூலகர் இளவரசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்