ஆக .21
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையத்தில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 19 லட்சம் மதிப்பீட்டில் பொங்குபாளையம் சாலையில் புதிய தார் சாலை மேம்படுத்தும் பணியும் கணக்கம்பாளையம் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கோல்டன் அவன்யூ பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்
கே என் விஜயகுமார் துவக்கி வைத்தார்
உடன் ஒன்றிய பெருந்தலைவர் எஸ் எம் பி சொர்ணாம்பாள் பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் கண்ணம்பாள் ராமசாமி, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் திருமதி சங்கீதா சந்திரசேகர், துணைத்தலைவர் வீரக்குமார், ஊராட்சி வார்டு உறுப்பினர் ராமமூர்த்தி , அதிமுக பாசறை ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.