மதுரை
ஜூலை 25
மதுரை எல்லீஸ் நகர் மெயின் ரோட்டில்
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சார்பில் சுமார் இரண்டு கோடியே எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த வணிக வளாகம் திறப்பு விழாவில்
அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பிடிஆர்.ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி திமுக, மு.பூமிநாதன் மதிமுக, மேயர் இந்திராணி மற்றும் மண்டலத் தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக மீனாட்சி அம்மன் திருக்கோயில்
அறங்காவலர் மற்றும் குழு உறுப்பினர்களுக்கும் அதனைத் தொடர்ந்து
சிறப்பு வரவேற்பாளார்களாக பங்கேற்ற அனைவருக்கும்
கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர்/செயல் அலுவலர் எஸ், கிருஷ்ணன், அவர்களால் பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வின் போது
அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் உதவி ஆணையர்,
யக்ஞநாராயணன்,
மீனாட்சி அம்மன் கோயில் ஃபேஸ்கார் காளிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.