ஈரோடு ஆக 13
கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் இந்தி மற்றும் பிற மொழிகள் துறை சார்பாக ரங்க்மஞ்ச் ’24 இலக்கிய மன்றத்தின் 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான துவக்கவிழா மற்றும் மொழி சார்ந்த வேலை வாய்ப்புகள் குறித்த மேம்பாட்டு நிகழ்வு நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் முன்னிலை வகித்தார் முதல்வர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில், சேலத்தைச் சேர்ந்த மொழிப் பயிற்றுனர் ஐஸ்வர்யா ஜெயராமன் கலந்து கொண்டு, ‘மொழிகள் கற்றுக் கொள்வதன் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக, துறைத்தலைவர் முனைவர் அன்புமணி வரவேற்றார். நிகழ்வின் நிறைவில், இலக்கிய மன்றத்தின் செயலர் இறுதியாண்டு மாணவர் லக்ஷ்மண் சிங் நன்றியுரை வழங்கினார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.