போகலூர், டிச.9-
பரமக்குடி சட்டமன்ற தொகுதி போகலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தெய்வேந்திர நல்லூர், வணங்கானேந்தல், பூவிளத்தூர் கருத்தனேந்தல் மற்றும் கே.வலசை ஆகிய கிராமங்களில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2023-2024,2024-2025 மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நிழற்குடை மற்றும் நியாய விலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் போகலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன் கலந்து கொண்டு பேசும் போது, திராவிட மாடல் திமுக ஆட்சியில் மக்களை தேடி நலத்திட்ட உதவிகள் வந்து கொண்டு இருக்கிறது. பல எண்ணற்ற நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று உள்ளார். குறிப்பாக கிராமங்களில் மக்கள் கோரிக்கை உடனுக்குடன் நிறைவேற்ற எங்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நான் உங்களை நேரில் சந்தித்து உங்கள் தேவைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றி தருகிறோம்.
உங்கள் கோரிக்கை அனைத்தும் இந்த நல்லாட்சியில் நிறைவேற்றி தரப்படும். நம் முதலமைச்சர் மக்களுக்காக இரவு பகல் பாராது உழைத்து கொண்டு இருக்கிறார். மற்ற மாநிலங்களுக்கு நம் மாநிலம் முன்னோடி மாநிலமாக முன்னோடி முதல்வராக திகழ்ந்து வருகிறார். தற்போது போல தொடர்ந்து உங்கள் ஆதரவு திராவிட மாடல் திமுகவிற்கு வழங்க வேண்டும்,
இவ்வாறு அவர் பேசினார்.
கே.வலசை கிராமத்தில் பஸ் சரிவர வரவில்லை என்று பொது மக்கள் கூறிய உடன் அதே இடத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் போக்குவரத்து அதிகாரிகளுக்கு போன் செய்து அரசு பஸ் குறித்த நேரத்தில் வந்து செல்ல வேண்டும் என்று போனில் கூறி மக்கள் புகார் மீது துரித நடவடிக்கை எடுத்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தனி வருவாய் அலுவலர் கார்த்திகேயன் ரேசன் விற்பனையாளர் முருகேசன் மற்றும் சிவனேசன், போகலூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் கலைச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கார்த்திக்பாண்டி, சிவசுப்பிரமணியன், வள்ளி மயில் சண்முகம், ராமமூர்த்தி, குருசாமி மற்றும் ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் முத்து செல்வி அமிர்தபாண்டி , வழக்கறிஞர் பரமசிவம், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் அருண் பாண்டி, ஒன்றிய இளைஞரணி ஹரிவரசன் கிளைக் கழகச் செயலாளர்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.