கன்னியாகுமரி டிச 17
கன்னியாகுமரி அடுத்துள்ள ஒற்றையால்விளையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது .
நிகழ்ச்சியின் தொடக்கமாக முன்னதாக இறை வணக்கம் பாடல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சாலோமன் தீபக் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் மைக்கிள் எடில்பெர்ட்,மாவட்ட பொருளாளர் பன்னீர் செல்வம்,செய்தி தொடர்பாளர் விஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி ,புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.