மார்த்தாண்டம், பிப்-17
குழித்துறை பகுதியில் கு|மரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு காமராஜ் பவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏவுக்கு குழித்துறை சந்திப்பில் வைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதை அடுத்து புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் டாக்டர் விஜயகுமார் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் செல்வபெருந்தகை எம் எல் ஏ காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம் பி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வகுமார் மற்றும் தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.