நித்திரவிளை, நவ- 25
தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இரைமன்துறை அரசு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ் குமார் இடம் கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்றது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்தது.
இதையடுத்து நேற்று கட்டிடத்தை மாணவ மாணவியர் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம் எல் ஏ கலந்து கொண்டு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார். தலைமை ஆசிரியை மெட்டில்டா, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.