மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் (18.12.2024) அன்று கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திலிருந்து, காணொளிக்காட்சி வாயிலாக, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.1 கோடியே 7 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையத்தை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில், அமைக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். உடன், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.திருநாவுக்கரசு, பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் எஸ்.எஸ் சங்கர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.