நாகர்கோவில் நவ 27
குமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள அனந்தம் பாலம் சந்திப்பு பகுதியில் தமிழ் தேசிய இயக்கம் தலைமை அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது (நவம்பர் 26 ம் தேதி)
நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொது சிந்தனையாளர்கள் என பல்வேறு தரப்பினர்கள் இணைந்து
தலைமை அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் நாகர்கோவில் தலைவர் ஹரி மகாராஜா ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். தமிழ் தேசிய இயக்கத்தின் நிறுவனரும் தலைவருமான ம.கோபுரராஜ் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக குமரி மாவட்ட செயலாளர் ராஜேஸ்வர பாண்டியன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணைத்தலைவர் சுரேஷ், சத்திரிய நாடார் இயக்க குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனத் தலைவர் கோபு ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.