மயிலாடுதுறை செப்.25
குத்தாலம் அருகே செம்பியன்கோமல் கிராமத்தில்
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. பூம்புகார் எம்எல்ஏ பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் ஊராட்சி செம்பியன்கோமல் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூபாய் 62.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது.
முன்னதாக காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் குத்துவிளக்கேற்றி சிறப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.திமுக குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா முன்னிலை வகித்தார்.
இதில் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும்,பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வக்கீல் வினோத், திவ்யாசரண்ராஜ் வார்டு உறுப்பினர்கள்,மகாலட்சுமிசந்திரசேகரன்,இளவரசன் மற்றும் ஒன்றிய துணை செயலாளர்கள் முருகன், வரதராஜன், லெட்சுமிகாசிராஜன், கிளை செயலாளர்கள் நடராஜ்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் மற்றும் கிராமவாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.