வேலூர்-12
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று சிறப்புரையாற்றி துவக்கினார்
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, தமிழ்நாடு முதலமைச்சரின் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தருமபுரியில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காட்பாடி தாலுகா, சேவூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் காணொலி காட்சி வாயிலாக பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன். மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், ஒன்றியக்குழுத் தலைவர்கள் வேல்முருகன், ரவிச்சந்திரன், சத்தியானந்தம், அமுதா ஞானசேகரன், பாஸ்கரன், சித்ரா ஜனார்த்தனன், திவ்யா கமல் பிரசாத், துணைத் தலைவர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலியமூர்த்தி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.