சென்னை, செப்டம்பர்- 29 , இந்தியாவின் முதல் இதய அதிர்ச்சி சிகிச்சை குழு தொடக்க விழா சென்னை வட பழனி காவேரி மருத்துவ மனையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேராசிரியர் தணிகாச்சலம், காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த இதய அதிர்ச்சி சிகிச்சையில் ஒரு புதிய தர அளவுகோலை இம்மருத்துவமனை நிறுவுகிறது.
இதய செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான
நோயாளிகளுக்கு விரைவான, சிகிச்சையை வழங்குவதற்கென்றே இக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது.
சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் தாமதம் பல நேரங்களில் உயிரிழப்பிற்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், இதை நிகழாமல் தடுப்பதே இதய அதிர்ச்சி சிகிச்சைக்கான நோக்கமாகும்.
இந்நிகழ்வின் போது உரையாற்றிய பேராசிரியர் எஸ் . தணிகாச்சலம், இந்நோயின்
இன்றியமையாத முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசியதாவது:-
இதய அதிர்ச்சி என்பது
உடனடியாக ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சை பராமரிப்பு தேவை யாகும்.
இதை கால தாமதமின்றி சரியான இடையீட்டு நடவடிக்கை மேற்கொள்வதின் வழியாக உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பலரின் உயிர்களை காக்கவே காவேரி மருந்துவமனையின் இதய அதிர்ச்சி சிகிச்சைக்குழு செயல்படும்.
இதய பராமரிப்பில் புதிய தர நிலையை நிறுவும் இந்த முன்னெடுப்பு நடவடிக்கையில் கார்டியாக் அரஸ்ட் எனப்படும் இதய தம்பம் பாதிப்பினால் ஏற்படும் ஏற்படும் உயிரிழப்பு விகிதங்களை குறைக்கலாம் என்றார்