நீலகிரி. டிசம்.03
மக்கள் மேம்பாடு, மாணவர் முன்னேற்றத்திற்கு நூலகம் பெரிதும் பயன்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எல்லா பகுதிகளிலும் பொது நூலகங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ் கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள கைகாட்டி பகுதியில் கலைஞர் நூலகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா மற்றும் தமிழக அரசு கொறடா ராமச்சந்திரன் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தனர் நீலகிரி மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் பா.மு .முபாரக் தலைமையில் நடந்த இவ்விழாவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசி, வினோத் குமார், முரளிதரன் ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். நிகழ்வில் கீழ்கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமன், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் போஜன், காளிதாஸ், ரவிக்குமார், தமிழ்ச்செல்வன், லட்சுமி, செந்தில் ரங்கராஜ், நாசர் அலி, ராஜு, மாவட்ட சேர்மன் பொன்தோஸ், அன்வர், வாசிம் ராஜா, வீரபத்திரன், குன்னூர் ராமசாமி, கோத்தகிரி, பேரூராட்சி மன்ற தலைவி ஜெயக்குமாரி, மாவட்ட ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை கழக பேச்சாளர் இளந்தென்றல் பாபு, சின். தாமரைசெல்வன், தங்கேஸ், ப, மாணவரணி அகல்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.