நாகர்கோவில் டிச 2
குமரி மாவட்டம்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிவிளை பகுதியில் காமராஜர் சிலையுடன் கூடிய படிப்பகம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் அமைத்து தரக்கோரி நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்திக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 40,00,00 நிதி ஒதுக்கீடு செய்து
பெருந்தலைவர் காமராஜர் சிலையுடன் கூடிய படிப்பகம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. இதனை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி நேற்று திறந்து வைத்தார்.
உடன் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் மேரி ஜேனட் விஜிலா, இந்து நாடார் சங்க தலைவர் காமராஜர், சந்திரசேகர் மற்றும் பள்ளிவிளை ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.