செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம் மாம்பாக்கம் கோவிலாஞ்சேரியில்
அமுதம் சூப்பர் மார்ட் மற்றும் அமுதம் டெக்ஸ் திறப்பு விழா நடைபெற்றது.
இதனை, தாம்பரம் மாநகச் செயலாளர் மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் மதுரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கோவிலாஞ்சேரி திமுக செயலாளர் மு.வேல்முருகன் ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் ஆகியோர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.