அஞ்சுகிராமம் மார்ச்-5 அழகப்பபுரம் அருகே புன்னார்குளத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் அருன் டிசா சோ, ஆன்றோ சகாய ஜெய்சன் ஆகியோர் நிறுவியுள்ள அறம் தற்காப்புக் கலை பயிற்சி கூடம் உள்ளது. இங்கு அடிமுறை, சிலம்பம், யோகா, ஜிம்னாஸ்டிக், போன்ற வகுப்புகள் நடைபெறுகிறது. இதன் புதிய வகுப்புகள் துவக்கவிழா நடந்தது.அழகப்பபுரம் நகர காங்கிரஸ் தலைவர் அன்ட்ரூஸ் மணி, அழகப்பபுரம் பேரூராட்சி தலைவர் அனிற்றா முன்னிலை வகித்தனர். அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார தலைவி தங்கம் நடேசன் தலைமை தாங்கினார்.
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி புதிய வகுப்புக்களை தொடங்கிவைத்தார். சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட முற்போக்கு மாணவர் கழக தலைவர் இந்திராநகர் முத்துக்குமார், காங்கிரஸ் மாநில செயலாளர் ஶ்ரீனிவாசன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவக்குமார், மருங்கூர் நகர காங்கிரஸ் தலைவர் ஹெலன், வார்டு கவுண்சிலர்கள் பிரகாஷ், ஜஸ்டின், மலர்கொடி, கலந்துகொண்டனர் அனைவரையும் அறம் தற்காப்புக் கலை பயிற்சி அமைப்பாளரும், குமரி கிழக்கு மாவட்ட
காங் கிரஸ் விளையாட்டு துறை மாவட்ட தலைவர் அருன் டிசாசோ, அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார வர்த்தக தலைவர் ஆன்றோ சகாய ஜெய்சன் ஆகியோர் நன்றி கூறினர்.