மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா உருக்கமான பேச்சு!
ராமநாதபுரம், செப்.2-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமுமுகவின் 30 ஆம் ஆண்டு துவக்க விழா கிழக்கு மாவட்டம் சார்பில் தொண்டியில் துவங்கி ஒவ்வொரு ஒன்றியம், ஊராட்சி ,பேரூர் மற்றும் குக் கிராமங்களில் சென்று தொடக்க விழா நிகழ்ச்சியை நடத்தி அந்தப் பகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில்
30 ஆம் ஆண்டு தமுமுக துவக்க நாளை முன்னிட்டு இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் புதுவலசை கிளை மற்றும் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்ததான முகாம் மற்றும் கொடியேற்றும் நிகழ்வு தமுமுக மாவட்ட செயலாளர் ஜாவித் அஸ்ஸாம் தலைமையில் நடைபெற்றது. இரத்ததான முகாமை தமுமுகவின் மாநில செயலாளர் தொண்டி
சாதிக் பாட்சா துவக்கி வைத்து தமுமுகவில் மக்கள் நல சேவைகள் ரத்ததானம் வழங்குதல் மருத்துவ உதவிகள் கொரோனா காலங்களில் ஏற்பட்ட இறப்பிற்கு அவரவர் சமுதாயப்படி இறுதிச் சடங்கு செய்வது போன்ற பல்வேறு சமுதாய நற்பணிகளில் தொடர்ந்து 30 ஆண்டுகள் தமுமுக செய்தி வந்துள்ளது. இந்த சேவை இறைவன் அருளால் தொடர்ந்து ஒவ்வொரு சிறிய கிராமங்களுக்கும் நேரில் சென்று அவர்களின் தேவைகள் அறிந்து மருத்துவ உதவி கல்வி உதவி திருமண உதவி போன்ற அனைத்து உதவிகளும் தமுமுக எந்த விதத்திலும் தன்னலமின்றி செய்து கொண்டிருக்கும்.
அதன் வெளிப்பாடுதான் தற்போது இங்கு நடக்கும் ரத்ததான முகாம் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.
என்று உருக்கமாக பேசி துவக்கி வைத்தார்.
புதுவலசைகிளை தலைவர் ஜாகிர் உசேன் வரவேற்றார்.
விழாவில்
சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மமக கிழக்கு மாவட்டத் தலைவர்
பட்டாணி மீரான்
மமக மாவட்ட செயலாளர்
வழக்கறிஞர் ஜிப்ரி,
மாவட்ட துணைச் செயலாளர்
உபய்துல்லா,
மமக மாவட்ட துணை செயலாளர்
தொண்டி ராஜ் ,
தமுமுகவின் மாவட்டத் துணைச் செயலாளர்
அகமது ஹசன்
, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர்
கலந்தர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர்
தமிம் அன்சாரி
இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர்கள்
ராசித் ரோஷன்,
சைபான் அலி, யாசிர்,
எஸ்எம்ஐ மாவட்டச் செயலாளர்
சமிர் உசேன், மமக கிளைச் செயலாளர்
மகாதீர் முகம்மது, கிளை பொருளாளர்
ரசூல் தீன், முன்னாள் கிளை தலைவர்
மற்றும்
ஊராட்சிமன்ற தலைவர் மீரான்ஒலி
புதுவலசை ஜமாத் தலைவர்
சேக் முஹம்மது, செயலாளர் ஹாஜா நஜிமுதீன், து தலைவர் களஞ்சியம்,சங்க தலைவர் தஜுதீன், செயலாளர் அப்துல் மாலிக் சமூக சேவகர் சீனி நசீர் பொதுமக்கள் என்று பலரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
50க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.