திருப்பூர் ஜூலை: 6
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் வேதாந்தா குழுமப் பள்ளியில் மாணவத் தலைவன் பதவியேற்பு விழா!!
நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜி.பார்த்திபன் துணை கண்கானிப்பாளர் காவல்துறை காங்கயம் கலந்துகொண்டார்.பள்ளி மாணவ தலைவனாக பிரீத்தம் சிங், துணை தலைவி ரக்க்ஷா குவார், மற்றும் விளையாட்டுத்துறை தலைவனாக த்ரிலோத் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவ்விழாவில் முதல்வர்
K S .ஆனந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். ஜி.பார்த்திபன் அவர்களும் வேதாந்தா குழுமப் பள்ளியின் தாளாளர்
சரவணன், இயக்குநர் டாக்டர் ஜீ.எஸ் வோஹ்ரா அவர்களும் தலைமைத்தாங்கி பதவி பிரமாணம் செய்துவைத்து, மாணவர்களின் தனித்திறனான குத்துச்சண்டை, துப்பாக்கி சுடுதல், கயிறு ஏறுதல், ஆகியவற்றைக் கண்டுகளித்து, பேருரையாற்றினார்கள். துணை முதல்வர் நன்றியுறையாற்றினார், பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் வெற்றிபெற்றவர்களை பாராட்டினார்கள்.