கன்னியாகுமரி ஜூலை 28
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு இலட்சுமிபுரத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக சிறு மின்விசை குடிநீர் திட்டம் அமைக்க வேண்டும் என பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் காந்திராஜ் பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதனை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் பொது நிதியிலிருந்து சிறு மின் விசை குடிநீர் திட்டத்தில் சின்டெக்ஸ் டேங்க் அமைக்க ரூபாய் 1.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் காந்திராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக
அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜானகி இளங்கோ கலந்து கொண்டு தலைமை தாங்கி புதிய சின்டெக்ஸ் டேங்கில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அஞ்சுகிராமம் பேரூர் திமுக துணைச் செயலாளர் சமூக சேவகர் சொர்ணப்பன், மாவட்ட பிரதிநிதி சுயம்பு, கிளைச் செயலாளர் ரஜீஷ், பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி ராஜேஸ்வரி, வசந்தா ஆதித்தன், ராகினி, மல்லிகா, அழகம்மாள், சுதாகர், அமிர்த கனி, மற்றும் வள்ளுவர் மகளிர் இயக்கத்தினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.