திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கத்தின் ராக் போர்ட் ரோட்டராக்ட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்ச்சி சிறுநாயக்கன்பட்டி PV இவன்ட்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதிய தலைவராக Rtr. S.R.நவீன், புதிய செயலராக Rtr. T.முத்து முனிசாமி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டார்கள். அதன் பின்னர் 2000 பனை விதைகள் இரு சங்க உறுப்பினர்களால், கரட்டழகன்பட்டியில் குயின் சிட்டி சங்கத்தினரால் இவ்வருடம் தூர் வாரப்பட்ட குளத்தின் கரை முழுவதும் பனை விதைகள் விதைக்கப்பட்டன.
இவ்விழா VP கார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் Rtn.P. குமரப்பன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ரோட்டராக்ட் பிரதிநிதிகள் Rtr. P. கோபாலகிருஷ்ணன், Rtn.Rtr. S.சுனில் கௌதம்ராஜ், குயின் சிட்டி தலைவர் Rtn. கவிதா செந்தில்குமார், செயலர் Rtn. பார்க்கவி சந்தோஷ், ரோட்டராக்ட் தலைவர் Rtn. ஆர்த்தி, ரோட்டராக்ட் துணைத் தலைவர் Rtn. பத்மா, ரோட்டராக்ட் குழுவினர் Rtn. சாரதா Rtn. ராஜாத்தி,
Rtn.அம்சவள்ளி பாண்டியன், SSM, பார்வதி கல்லூரி ரோட்டராக்ட் மாணவர்கள், பிற ரோட்டராக்ட் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.