சென்னை பெருநகரம் மாநகராட்சி, மண்டலம்-14-ல்
மண்டல குழு கூட்டம்
டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர மண்டல அலுவல் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது.
14 வது மண்டலக் குழு தலைவர் எஸ்.வி.இரவிச்சந்திரன் தலைமையில் மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) மற்றும் சென்னை மாநகராட்சியின் கல்வி நிலைக் குழு தலைவர் பாலவாக்கம் த.விஸ்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் ஜே.கே. மணிகண்டன், வ.பாபு, சர்மிளா தேவி திவாகர் சமீனா செல்வம் தமிழரசி சோமு ஜே.எல்.லட்சுமி ஜே.ஷெர்லி தாமஸ், கே. பி.கே.சதீஷ்குமார், பி.சிவப்பிரகாசம் மற்றும் மண்டல பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் குடிநீர் வாரியம் மின்சார வாரியம் மழை நீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதி, தெரு விளக்கு சுற்றுச்சூழல் தூய்மை பணி குறித்து விவாதித்தனர்.