மதுரை ஆகஸ்ட் 29,
மதுரை மாநகர காவல் துறையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 37 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை அளித்தனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தெற்கு), துணை ஆணையர் (வடக்கு), துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட சரக காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.