ஆந்திராவில் தேசிய அளவிலான ரோல் பால் போட்டியில் தமிழக அணியில் இடம் பெற்ற திண்டுக்கல் மாணவர்கள்.
தேசிய அளவிலான 17வயதுக்குட்பட்டோருக்கான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டி ஆந்திர மாநிலம் கர்நுல் மாவட்டத்தில் வருகிற ஜனவரி 8 முதல் 11 ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழக அணி சார்பில் 12 ஆண்களும், 12 பெண்களும் கலந்து கொள்கின்றனர். இதில் ஆண்கள் பிரிவில் ஜெயசூர்யா (வயது16) தேஜஸ் (வயது 16) பெண்கள் பிரிவில் மது (வயது 15), சஹானா (வயது 16) ஆகிய 4 – பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற திண்டுக்கல் மாணவர்கள். இந்த 4 மணவர்களுக்கு சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் வழியனுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சர்வதேச நடுவரும், பயிற்சியாளருமான மாஸ்டர் எம்.பிரேம்நாத், பயிற்சியாளர் தங்கலட்சுமி, தீபக், பிரதீப் மற்றும் நவீன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.