தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைத்திட வேண்டும்
மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை
போகலூர்,ஆக.27-தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களையும் இணைத்திட வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கூறுகள் ஓரளவிற்கு மனதிருப்தியையும் பணியாளர்களின் எதிர்கால வாழ்வியல் ஆதாரத்தையும் உறுதி செய்வதால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டம் தமிழக அரசு பணியாளர்களுக்கும் பொருந்தும் வண்ணம் போர்க்கால அடிப்படையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
மேலும் தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களையும் இணைத்திட வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தினை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் வரவேற்கிறது.
இத்திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு பணிக்கு 01.01.2004 க்கு முன்னர் பணியில் சேர்ந்தோருக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தாமல் ஒரு வரையறுக்கப்பட்ட ஓய்வூதினை உத்திரவாத படுத்துவதற்கான இலக்கினை நோக்கி சென்றுள்ளது வரவேற்கத்தக்கது.
இது நாள் வரை குடும்ப ஓய்வூதியம் என்பது முற்றிலுமாக மறுக்கப்பட்ட சூழ்நிலையில் தற்போது அதற்கான வழிவகையை உருவாக்கி மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
25 ஆண்டு கால பணி நிறைவு செய்தவர்களுக்கு முழு ஓய்வூதியம் அதற்கான குறைவான பணிகாலத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை மத்திய அரசு உறுதி செய்து அறிவித்துள்ளது.
இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தினை 01.04.2025 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளது பாராட்டுத்தக்கது.
கிராம ஊராட்சியில் பணியாற்றி வரும் 12525 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் 1996 ம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டு 28 ஆண்டுகள் கடந்து தற்போதைய முதல்வர் அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது சிறப்பு கால முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கி ஊராட்சி செயலாளர்களை ஆதரித்தார்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக ஊராட்சி செயலர்கள் சிறப்பு காலம் வரை ஊதிய விகிதத்தில் இருந்து 1590-50-400 என்ற கால முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கி ஊராட்சி செயலாளர்களை ஆதரித்தார்.
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக ஊராட்சி செயலாளர்கள் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் இருந்து 15900-50-400 என்ற காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்த ஊதிய விகிதமானது ஊராட்சி ஒன்றியத்தில் பணியமற்த்தப்படும் பதிவு எழுத்தர் நிலையில் ஆன ஊதிய விகிதமாகும். ஆனால் இது நாள் வரை அரசு பணியாளர்களுக்கான எந்த சலுகையும் அனுமதிக்கப்படவில்லை.
ஊராட்சி செயலர்கள் தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்திலும் இணைக்கப்படவில்லை. இது தொடர்பாக மாநில அமைப்பு இரண்டு கட்ட போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கூறுகள் ஓரளவுக்கு மனதிருத்தியும் பணியாளர்களின் எதிர்கால வாழ்வியல் ஆதாரத்தையும் உறுதி செய்வதால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டம் தமிழக அரசு பணியாளருக்கும் பொருந்தும் வண்ணம் போர்க்கால அடிப்படையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
மேலும் தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களையும் இணைத்திட வேண்டும் என்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் கனிவுடன் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு கோரிக்கையில் கூறியுள்ளார்.
உடன் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் முருகன் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் பொருளாளர் சிவசாமி ஆகியோர் உடன் இருந்தார்கள்.