பரமக்குடி,மே. 29:
உலக பட்டினத்தை முன்னிட்டு பரமக்குடியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். ஆண்டுத்தோறும் மே 28ஆம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வேண்டுகோளின்படி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தமிழக முழுவதும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பரமக்குடி பேருந்து நிலையம், எமனேஸ்வரம் உள்ளிட்ட 36 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.