நாகர்கோவில் பிப் 17
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட மற்றும் குமரி மைய மாவட்டம் சார்பில் வடசேரி அண்ணா சிலை அருகே அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்தும், வேங்கை வயல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேரூர் சங்கரன்புதூரில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு மன்னராட்சி காலத்தில் இந்து மக்களுக்காக வழங்கப்பட்ட வாழ்விடத்தை குறுக்கு வழியில் அபகரிக்க துடிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்தும்,. வேங்கைவயல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை தண்டிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சிக்கந்தர் மலை விவகாரத்தை கண்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அல் காலித், மைய மாவட்ட செயலாளர் மேசியா ஆகியோர் தலைமை வகித்தனர். வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் ஜோசப், தென் மண்டல துணைச் செயலாளர் பகலவன், பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் ஸ்டெர்லின் பாக்கியதாஸ், உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.