நாகர்கோவில் செப் 16
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியம், மயிலாடியில் நடைபெற்ற உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் விழாவில் 5 பேரூராட்சிகள் மற்றும் 5 ஊராட்சிகளில் உள்ள அ.தி.மு.க-வினருக்கு புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ வழங்கினார்.
இதற்கான விழாவில் மயிலாடி புதூர் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள் இல்லத்தில் உள்ள அரங்கத்தில், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தளவாய்சுந்தரம், கழக நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது:-
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளினை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மிக பொருத்தமான ஒன்றாகும். உறுப்பினர் அடையாள அட்டை என்பது உறுப்பினர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளருக்கும் இடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்துவதாகும். அன்பு எனும் வழியில் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி இலக்கை அடைவோம். உறுப்பினர் அடையாள அட்டை தவறியவர்கள், கிடைக்கப்பெறாதவர்கள் புதிய படிவத்தில் விண்ணப்பம் எழுதி சம்மந்தப்பட்ட ஒன்றிய கழகச் செயலாளரிடம் கொடுத்தால் நிச்சயம் புதிய கார்டு கிடைக்கும். குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று (16-09-2024) நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இப்பொதுக்கூட்டத்திற்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்தை சார்ந்தவர்கள் அனைவரும் தவாறது வருகை தர வேண்டும். அ.இ.அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்கு தீவிரமாக செயல்பட்டு வரும் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம் பணி பாராட்டுக்குரியது. ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைவரின் அன்பை பெற்றவராக அவர் விளங்கி வருகிறார். கழககத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் அயராது பணியாற்ற வேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்ப்பதிலும், கழகத்தின் வெற்றிக்கு வியூகம் வகுத்து வெற்றியடைவதற்கு தீவிரமாக உழைத்திட வேண்டும். என அவர் பேசினார்.
கழக நிர்வாகிககள் ராஜன், ராணி, சேவியர் மனேரகன், சுகுமாரன், தாமரை தினேஷ், முத்துக்குமார், பாலமுருகன், ரபீக், லெட்சுமி ஸ்ரீனிவாசன், பாண்டியன், குமரகுரு, சதீஸ், ராஜபாண்டியன், வீரபுத்தின், மனோகரன், ஸ்ரீனிவாசன், மணிகண்டன், செல்லம்பிள்ளை, விஜயகுமார், லெட்சுமணன், குமரகுரு, பகவதிகுமார், பேராசிரியர் நீலபெருமாள், குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.