ஈரோடு, ஜன.14
பெருந்துறை கொங்கு பொறியி யல் கல்லூரியின் 37 வது பட்டமளிப்பு விழா கல் லூரியின் கொங்கு பல் கலை மையத்தில் நடை பெற்றது .
விழாவில் 2024ம் ஆண்டு மே மாதம் கல் லூரிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு பட் டம் அளிக்கப்பட்டது. இதில் இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸின் இயக்குனர் பேராசிரியர் காமகோடி சிறப்பு விருந்தின ராக பங்கேற்று
இளம்பட்டதாரிகளுக்கு பட்டங்களையும், பதக் கங்களையும் வழங்கி னார். மொத்தம் 1765 பட் டதாரிகள் (இளங்கலை
1441, முது கலை 324) இதில் பட்டம் பெற்றனர்.
விழாவில், படிப்பில் சிறந்து விளங்கி, உயர்தரம் பெற்ற 98 பேருக்கு (இளங்கலை 82, முது கலை 16) பதக்கங்களும் வழங்கப்பட்டன.
கொங்கு வேளா ளார் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளை யின் தலைவர் மருத் துவர் குமாரசாமி, கல்லூரியின் தாளா ளர் இளங்கோ, கல்லூரி முதல்வர் முனைவர் பாலுசாமி, அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள் பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் கல்லூரியின் பல் வேறு அமைப்புகளின் முதன்மை ஒருங்கிணைப் பாளர்கள் இதில் பங்கேற்றனர்.