திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் கால்வாய்கள் தூர்வாரும் பணி ரூபாய் 5 லட்சம் செலவில் பொக்லைன் இயந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது.
தற்போது மழைக்காலம் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமங்கலம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நகரில் உள்ள சோழவந்தான் ரோடு சாலை குறிஞ்சி நகர் பெரிய ஓடை பிரண்ட்ஸ் காலனி முகமதுசாபுரம் என்.ஜி.ஒ நகர் ஓடை வடகரை கற்பக நகர் பெரிய கண்மாய் உள்ளிட்ட ஆறு இடங்களில் நகராட்சி நிர்வாகத்தினர். மழை நீரை சேமிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களில் உள்ள முட்புதர்களை அகற்றி குப்பைகள் உள்ளிட்ட அனைத்து மரக்கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியின் போது நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் நகராட்சி ஆணையாளர் அசோக் குமார் சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் மற்றும் சுகாதார பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.