அஞ்சு கிராமம் டிச 18
அழகப்பபுரம் அந்தோணியார் பள்ளியில் மாவட்ட ஆட்சியாளரின் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் முதியோர் உதவிதொகை,விதவை,மகளிர்,மாற்றுதிரனாளிகள் உதவிதொகை,இலவச வீட்டுமனைபட்டா என அணைத்து துறைக்குமான அதிகாரிகள் கலந்துகொண்டு மனுக்களை பெற்றனர்., இந்நிலையில் முகாம் தொடங்கியவுடன் விசிக குமரி மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் சமூக சேவகருமான இந்திரா நகர் முத்துக்குமார் தலைமையில் புதுக்குளம் அடுக்குமாடி குடியிருப்பில் பணம் கட்டி பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் 384 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 20. 11.2023 அன்று தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் திறந்து வைத்தார்.அப்போது பணம் செலுத்தி காத்திருந்தவர்களுக்கு சாவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சேதுராமலிங்கம் வழங்கினார். மேலும் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏழை எளிய சொந்த வீடு இல்லாத மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும் என அரசு அறிவித்ததை அடுத்து சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடுத்து சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் பணத்தைச் செலுத்தி வீடுகளுக்கான சாவியை பெற்றுக் கொண்டனர். மேலும் வீட்டில் குடியிருந்தவர்கள் தங்களது வசதிக்கேற்ப அதிக பணம் செலவழித்து டைல்ஸ் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் சம்பவ இடம் சென்று 36 வீடுகளை சார்ந்தவர்களிடம் உங்களுக்கு இங்கு வீடு கிடையாது நீங்கள் அரசாங்கத்திற்கு பணம் கட்டவில்லை. திருட்டுத்தனமாக போலி சாவிகளை பயன்படுத்தி அத்துமீறி வீட்டில் வசித்து வருகின்றீர்கள். உங்கள் மீது போலீஸீல் புகார் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். மேலும் உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் . காலி செய்யாவிடில் வேறு பூட்டு போடப்படும் எனவும் கூறி உள்ளனர். குடியிருந்தோர் குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு, வீட்டு வரி ஆகியவை பெற்றுள்ளனர். மிகவும் ஏழைகள், அடித்தட்டு மக்கள், சொந்த வீடு இல்லாதவர்கள்,தினக்கூலிகள் சுமார் ஒரு வருடம் குடியிருந்தவர்களை திடீரென வீட்டை காலி செய்ய சொல்வதின் மர்மம் என்ன என்று தெரியாமல் தவித்தனர்.இந்நிலையில் சென்னை,அழகப்பபுரம்,தெங்கம்புதுரை சார்ந்த மூண்று பெண்கள் வீட்டுவசதிவாரிய அதிகாரிகளுடன் இணைந்து பணங்களை வாங்கிகொண்டு,போலியாக அரசு வீடுகளுக்கு வழங்கும் கடிதங்களை வழங்கி சாவிகளையும் கொடுத்துள்ளனர் வீடுகிடைத்த சந்தோஷத்தில் ஏமாற்றப்பட்டதை தெரியாமல் குடியிருப்பில் குடியேறிவிட்டனர் தற்போழுது ஏமாற்றப்பட்டதை அறிந்து விசிக மாவட்ட மாணவரணி செயலாளர் இந்திராநகர் முத்துக்குமாரிடமாரிடம் கண்ணீர் மல்க புலம்பியுள்ளனர்.இதனையடுத்து மாவட்ட ஆட்சியர்,வீட்டுவசதி வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அடுக்குமாடி குடிமிருப்பு பிரச்சணை வெளிச்சத்துக்குவந்துள்ளது.ஏமாற்றிய பெண்கள்,குடியிருப்பு வாரிய உதவி செயற் பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடியிருப்பிலேயே வீடுவழங்க வேண்டுமென கூறினர்.அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் வழங்கியதை அடுத்து கலைந்து சென்றனர்.