மதுரை:ஜூன் ;10
மதுரை செனாய் நகர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் தி ஐ ஃ பவுண்டேஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி நிஷா, அன்பு அறக்கட்டளை உடன் முதலுதவி சமூக நல அறக்கட்டளை இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த முகாம் முதலுதவி சமூக அறக்கட்டளையின் மாநில பொதுச் செயலாளர் முனைவர் சி.அர்சத் முபின் தலைமையில் மதுரை அண்ணா நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷோபனா பங்கேற்று கண் பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தி ஐ ஃ பவுண்டேஷன் மருத்துவர்கள் மிகச் சிறந்த முறையில் பரிசோதனை செய்து பார்வை குறைபாடு உள்ள நபர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் கண் கண்ணாடி வழங்குவதாக கூறினர். இதற்கான ஏற்பாடுகளை மாநில ஆலோசகர் ஆசிரியர் பிரபு மற்றும் மதுரை மாவட்ட தலைவர் சூரிய நாராயணன் துணைத் தலைவர் சிக்கந்தர் மற்றும் முதியோர் இல்ல மேலாளர் முருகப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்தனர். முகாமிற்கு வருகை புரிந்த பயனாளிகள் அன்பு அறக்கட்டளை நிறுவனர் அறந்தாங்கி நிஷா, மற்றும் சமூகநல அறக்கட்டளை நிறுவனர் அபு.இக்பால் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.