நாகர்கோவில் – டிச – 08,
குளச்சலில் அதிக பாரம் ஏற்றி மதுபோதையில் ஒட்டி வரப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.85, 500 வசூலிக்கப்பட்டது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், (பொறுப்பு) அவர்களின் மேற்பார்வையில், குளச்சல் போக்குவரத்து காவல்ஆய்வாளர் சந்தணகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் . சிதம்பர தாணு, சுரேஷ்குமார் மற்றும் காவலர்கள் களியங்காடு பகுதியில் நடத்தப்பட்ட வார இறுதிநாள் தீவிர வாகன சோதனையில் வள்ளியூர் பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற மினி லாரியை தடுத்து சோதனை செய்தபோது வாகனத்தில் போக்குவரத்து விதியை மீறி அதிக பாரம் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வாகனம் ஓட்டி வந்த நபரை பரிசோதித்ததில் ஓட்டுநர் மது போதையில் இருந்தது பிரீத் அனலைசர் கருவி மூலம் உறுதி செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விதியை மீறிய வாகனத்திற்கு அதிக பாரம் ஏற்றியதற்காக மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194 ன் படி ரூபாய் 28,000 அபராதமும் குடிபோதையில் வாகனம் இயக்கியதற்காக மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185 ன் படி ரூபாய் 10000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதைப்போல் மண்டைக்காடு பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் விதியை மீறி அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி அபாயகரமாக ஓட்டிவரப்பட்ட கேரள பதிவெண் கொண்ட மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டம் பிரிவு 194 ன் ரூபாய் 44,500 அபராதம் விதிக்கப்பட்டு மாற்று வாகனம் கொண்டுவரப்பட்டு பாரத்தை குறைத்தபின்னர் அபராத தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்த வைக்கப்பட்ட பின் வாகனம் விடுவிக்கப்பட்டது. இது குறித்து காவல் அதிகாரிகள் தெரிவிக்கையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் விதியை மீறி அதிக பாரம் ஏற்றி வாகன ஓட்டுதல் போன்ற குற்ற செயலில் ஈடுபட்டவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களிடம் பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.