நாகர்கோவில் நவ 25
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில் நாகர்கோவில் உட்கோட்டத்தில் சாலை விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 23.11.24 ம் தேதி இரவு, நாகர்கோவில் வெள்ளமடம் பகுதியில், லாரி ஒன்று அபாயகரமாக ஓட்டி வருவதாக கிடைத்த தகவலின் படி, நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் நான்கு சக்கர ரோந்து காவலர்கள், வடசேரி பகுதியில் வைத்து லாரியை மறித்து சோதனை செய்த போது, தூத்துக்குடியில் இருந்து கேரள மாநிலத்திற்கு சரக்கு ஏற்றிக் கொண்டு மாஞ்சாலுமூடைச் சேர்ந்த சஜின் என்பவரால் ஓட்டி வரப்பட்டது. அருகில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சைஜூ என்பவர் உதவியாளராக (கிளீனர்) இருந்தார். இருவரும் மது அருந்திவிட்டு லாரியை ஓட்டி வந்ததை கண்டறிந்து, இருவர் மீதும் குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு, மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் நீதிமன்ற நடவடிக்கைக்கு பிறகு, வாகன ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட உள்ளது.