நிலக்கோட்டை அக்.05.
பள்ளபட்டி ஊராட்சி சிப்காட் சாலையோரம் கொட்டி தீவைக்கப்படும் குப்பையால் அவ்வழியே செல்லும் பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
மேலும்
பள்ளபட்டி நகர் பகுதியிலிருந்து சந்தைவழியாக அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் பிரதான சாலையில் சாலையின் ஓரத்தில் ஊராட்சி தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்டி வருகின்றனர்,
இந்த குப்பைகளை தினமும் தீ வைத்து எரிப்பதால் சாலையில் செல்லும் பள்ளி குழந்தைகள்,தொழிற்பேட்டை தொழிலாளர்கள், விவசாயிகள் இருசக்கர நான்கு சக்கர வாகன ஓட்டிகள் என பலரும் கண் எரிச்சல், தும்மல்,இருமல் உள்ளிட்ட பல்வேறு இன்னலுக்கு ஆளாகின்றனர்,
இந்த நிலையில் மழை காலம் துவங்கியுள்ளதால் தொடர்ந்து கொட்டப்படும் குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இச்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை உடனடியாக அப்புரப்படுத்தி அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.