வேலூர்_25
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், இலவம்பாடி மதுரா, குடிசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ ராமர் ,ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற முப்பெரும் திருவிழாவில் செல்வ விநாயகர் சுவாமிக்கு அபிஷேகமும், ஆராதனையும், பொங்கல் வைத்தலும் ,ஸ்ரீ ராமர், ஸ்ரீ பொன்னியம்மன் ,திருவீதி உலாவும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர் திமுக அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ.குமர பாண்டியன், கலந்துகொண்டு முப்பெரும் திருவிழாவினை துவக்கி வைத்தார். உடன் மேட்டுக்குடி பி. சாந்தகுமார் , மேட்டுக்குடி முன்னாள் கவுன்சிலர் எஸ். திருப்பதி, தர்மகர்த்தா டி.கணபதி மற்றும் குடிசை கிராம ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் , பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.