நாகர்கோவில் நவ 4
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழா தெருமுனைக்கூட்டம் ஈத்தாமொழி சந்திப்பில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜாக்கமங்கலம் ஒன்றிய பெருந்துணை தலைவர் செ சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லைச்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் லிவிங்ஸ்டன், வழக்கறிஞர் பாலஜனாதிபதி செல்வம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பிரிட்டோ சேம், மாணிக்பிரபு, என் உயிரினும் மேலான கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டியில் மண்டல மற்று மாநில அளவில் கலந்து கொண்ட இளம் பேச்சாளர் ஹரிணி சிவனேசன் உட்பட மாவட்ட, மாநகர,ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.