நாகர்கோவில் ஜூன் 28
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மழையால் தோவாளை சானல் உடைப்பு ஏற்பட்டு உரிய நேரத்தில் சீரமைக்காததால், கன்னிபூ சாகுபடி செய்த 6500 ஏக்கர் நெல் நாற்றுகள் விவசாயம் பாதிப்பு . இதனை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் அழுகிய நெற்பயிர்களை வைத்துகொண்டு கூட்டத்தில் கோஷமிட்டு விவசாய சங்கத்தினர் வெளிநடப்பு செய்தது மட்டுமல்லாமல் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்ற அரங்கத்திற்கு வெளியே வந்து தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது . கூட்டம் தொடங்கியதுமே விவசாய சங்க பிரதிநிதிகள் கடந்த மே மாதம் ஏற்பட்ட புயல் மழையில் தோவாளை கால்வாய் உடைப்பு ஏற்பட்டது. – பல நாட்கள் ஆகியும் உடைப்பை சரி செய்ய பொதுப்பணித்துறையினர் முன்வராமல் அலட்சியம் செய்து வந்தனர் இதனால் ஜுன் ஒன்றாம் தேதி முதல் பருவ நெல் சாகுபடி பணிகளை தொடங்கினார்கள். இதில் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் 6500 ஏக்கர் நெல் நாற்றுகள் கருதி பாழ்பட்டது உரிய நேரத்தில் கால்வாயை சீரமைத்து தராத அதிகாரிகளை கண்டித்தும் வேலை தாமதமாக நடைபெறும் என முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாத அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்டு செய்யவும் கூறி கூட்டத்தில் விவசாயிகள் கோஷங்களை எழுப்பி விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாய சங்க பிரதிநிதிகள் வெளி நடப்பு செய்தனர் . தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நெல் நாற்றுகளுடன் தரையில் அமர்த்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.