ராமநாதபுரம், மார்ச் 27-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொண்டி பேரூர் சார்பில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இதயங்களை இணைக்கும் இப்தார் நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொண்டி பேரூர் தலைவர் காதர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக கிரா அத் நைனா முகமது ஆலிம் நிகழ்த்தினார். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் தொண்டி இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜசேகர் தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் சையத்அலி ஊடக அணி செயலாளர் பகுருல்லா மமக செயலாளர் பரக்கத் அலி தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மாவட்ட செயலாளர் ஷெரிஃபா ஜைனுல் ஜமிமா பானு தமுமுக செயலாளர் முகமது மைதீன் பொருளாளர் அப்துல்லா தொண்டர் அணி அசன் . மகளிர் பேரவை நாச்சியா தொண்டி அனைத்து ஜமாத்துடைய நிர்வாகிகள் தொண்டி இந்து தர்ம பரிபாலன சபை நிர்வாகிகள் திமுக, காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இஸ்லாமிய அழைப்பாளர் முனைவர் முஜிபுர் ரஹ்மான் ஐக்கிய ஜமாத் கௌரவத் தலைவர் பொறியாளர் அபூபக்கர் தொண்டி பெரியபள்ளி இமாம் முகமது காசிம் யூசுபி தொண்டி அருட்தந்தை வியாகுல அமிர்தராஜ் இந்து தர்ம பரிபாலன சபை மூத்த தலைவர் பாலசுப்பிரமணியம் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ஆனந்தன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம் ஜைனுலாப்தின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி முருகானந்தம் தொண்டி சையது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பார்வதி இளங்கோவன் தொண்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் காஞ்சனா ஆகியோரின் கல்வி சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தொண்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் 15 வது வார்டு பேரூர் கவுன்சிலர் பெரியசாமி நன்றி கூறினார்.