மார்ச்.12-
ரம்ஜான் பண்டிகையை யொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சமூக நல்லிணக்கத்தை வலியு றுத்தி இப்தார் நோன்புதிறப்பு நிகழ்ச்சி மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமை தாங் கினார். மாநகர் மாவட்ட
அவைத்தலைவர் நேமிநாதன் முன்னிலை வகித்தார். சாமுண்டிபுரம் பள்ளிவாசல் | தலைமை இமாம் கனி கிராத் அத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச் சியையொட்டி தேசத்தின் நன்மைக்காகவும், ஒற்றுமைக் காகவும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் சாமுண்டிபுரம் /பள்ளிவாசல் நிர்வாகிகள்
உள்பட இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனை வரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இதில் ம.தி.மு.க.மாநில நிர்வாகிகள் கெச்சப்பன், திருநாவுக்கரசு, அன்பழகன், கந்தசாமி,
தமயந்தி, மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில்
மும்மதத்தை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.