தஞ்சாவூர் ஜூலை 26:
குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்தால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும் என முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு பேசினார்.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத் தில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில்சிந்தனை நகைச்சு வை அரங்கிற்கு மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலா ளர் நாகேஸ்வரராவ் முன்னிலை வகித்தார். ஒப்பீடு எதற்காக? என்ற தலைப்பில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு பேசியதாவது:
மனிதர்கள் தான் ஜாதி, நிறம், நுண்ணறிவு போன்றவற்றில் ஒப்பீடு செய்து கொண்டிருக்கிறார் கள் .இன்றைய கல்வியே ஒப்பீடு அடிப்படையில் தான் உள்ளது. நுண்ணறிவு பல பரிமாணங்களு டன் தனித்தன்மை கொண்டது.
ஒவ்வொருவருக்கும் ஒரு நுண்ணறிவு இருக்கும். ஒப்பீடு என்பது ஆபத்தானது என்பதை புரிந்து கொண்டு ஒருவருடன் மற்றவர்களை ஒப்பீடு செய்யக் கூடாது .குழந்தைகளை மற்றவர்க ளுடன் ஒப்பீடு செய்யும்போது தனித் தன்மை இழந்து விடுகிறோம் .தாழ்வு மனப்பான்மை எதிர்மறை எண்ணங்கள் ,போட்டி, பொறாமை எண்ணங்கள் ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வாழ்வில் நகைச்சுவை என்ற தலைப்பில் பேச்சாளர் சிவகுருநாதன் பேசினார். இறையன்புக்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வீணையை பரிசாக வழங்கினார் .இதில் உதவி ஆட்சித் தலைவர் ( பயிற்சி) உத்கர்ஷ்குமார், பபாசி செயலர் முருகன், சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.