கலசலிங்கம் பல்கலைக்கழகம்:
ஐஇஇஇ மாணவர்கள் புராஜெக்ட் கண்காட்சி
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம்,ஐஇஇஇ மாணவர் குழு ( 34451) சார்பில் “ஏஐ பவர்” என்ற தலைப்பில் ஒரு நாள் புராஜெக்ட் எக்ஸ்போவை வேந்தர் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நூற்று இருபத்தைந்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இணை வேந்தர் டாக்டர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன், துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் மற்றும் பதிவாளர் டாக்டர் வி.வாசுதேவன் ஆகியோர் எக்ஸ்போவை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். ஐஇஇஇ குழு தலைவர், இயக்குநர் முனைவர்டி.தேவராஜ் வரவேற்று புராஜக்ட் ரிப்போர்ட்களை வழங்கினார்
சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் ,ரோபர்ட் போஸ் கம்பெனி மேலாளர், அருண் குமார், சிவகாசி,ஸ்ரீமேக்ஸ் மென்பொருள் தொழில்நுட்ப கம்பெனி, ராகவன், மற்றும் எஸ்ஐடி கல்லூரி பார்வதி, டீன் சிவகுமார், ராம்குமார் கலந்து கொண்டனர்.
வேலம்மாள் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்று 2500 ரூபாய் ரொக்கப் பரிசும்,
கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் முதல், மூன்றாம் இடம் பெற்று முறையே ரொக்கப் பரிசு ரூபாய் 5000, ரூ1000 மும்,அனைவருக்கும் சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
மாணவி ரித்திகா வரவேற்றார். முனைவர் டி.தேவராஜ் நன்றி கூறினார்.
பேராசிரியர்கள் அருணா ஜெயந்தி,தினேஷ் கார்த்தி, சரவணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.