ஈரோடு, ஆக. 6
தி மு க வில் இளைஞர் அணியை பலப்படுத்த மாநில இளைஞர் அணி செயலாளர் நடவடிக்கை எடுத்து வருகிறார் இதனால் தமிழ்நாடு முழுவதும் இளைஞர் அணிக்கு அதிகமான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார்
இதையொட்டி ஈரோடு. தெற்கு மாவட்டம் தி மு க இளைஞர் அணி சார்பில் இல்லந்தோறும் உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சி கடந்த பல மாதங்களாக தீவிரமாக நடந்து வந்தது இதில் ஏராளமான இளைஞர் அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்
இதை தொடர்ந்து இளைஞர் அணியில் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மேட்டுக் கடையில் நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்கினார் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் வரவேற்றார்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் கலந்து கொண்டு இளைஞர் அணியில் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார் அப்போது இளைஞர் அணியினருக்கு ரூ 2 லட்சம் மதிப்புள்ள கிரிக்கெட் மட்டை, கேரம்போர்டு போன்ற பொருட்கள் தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் சார்பில் வழங்கப்பட்டது இவைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசினார்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்தூர் சாமிநாதன் , கயல்விழி, மதிவேந்தன் கே இ பிரகாஷ் எம் பி அந்தியூர் செல்வராஜ் மற்றும் எம்எல்ஏக்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.