கந்திலி:செப்:13, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் அஇஅதிமுக கழக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தம்பா கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மேனாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் K.C.வீரமணி கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கினார். கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு வழங்கிய நிலையில் தொடர்ந்து
எலவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லரப்பட்டி, மைக்கா மேடு, அப்பாசாமி வட்டம், சங்கரன் வட்டம், ஜீவனந்தபுரம், முருகன் கோயில் வட்டம், வேலு வட்டம், அண்ணா நகர், அம்பேத்கர் நகர், தம்மன் வட்டம், வன்னியபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் அஇஅதிமுக கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் A.R.ராஜேந்திரன், திருப்பத்தூர் நகர கழக செயலாளர் T.T.குமார், திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருத்துவர் திருப்பதி, மாவட்ட இளம் பாசறை செயலாளர் T.T.C.சங்கர்,கந்திலி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் C.M.மணிகண்டன், கந்திலி கிழக்கு ஒன்றிய பொருளாளர் K.கேசவன், ஒன்றிய துணை செயலாளர் V.T.முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் நாகேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சபரிவாசன், அம்மா பேரவை ஒன்றிய துணை செயலாளர் V.மனோகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய துணை செயலாளர் கோகுல்,இளம் பாசறை செயலாளர் சக்திவேல் மற்றும் மாவட்ட, நகர ,ஒன்றிய பொறுப்பாளர்கள் , எலவம்பட்டி ஊராட்சி கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளராக இருந்து மறைந்த K.G.ரமேஷ் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வின் இறுதியில் ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் S.குமரன் நன்றியுரை வழங்கினார்.