ஆளும் திமுக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டிக்கிறேன்.!
ரப்பர் தொழிலாளர்கள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் பேச்சு..!
கன்னியாகுமரி அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான ESI மருத்துவ காப்பீடு பெறுவதற்கான இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி உறுதியாக துணைநிற்கிறது.
தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையும்,தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் பாழடைந்த நிலையில் இருப்பதையும் பார்க்கவே அதிர்ச்சிகரமான காட்சிகளாக இருந்தது.
கடுமையான சூழலிலும், ஆபத்தான இரசாயணங்களுடனும் பணிபுரியும் இந்த தொழிலாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களோ, மருத்துவ வசதிகளோ இல்லாத நிலையில்தான் இந்த மாநில அரசு வைத்திருக்கிறது. இது ஒரு அப்பட்டமான தொழிலாளர் உரிமை மீறல்.
ஆளும் திமுக அரசின் இந்த தொழிலாளர் விரோத போக்கை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிப்பதோடு, தொழிலாளர்களின் இந்த உரிமை போராட்டத்திற்கு முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.