நாகர்கோவில் – செப் – 09,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே உள்ள திலகர் தெருவில் வசதித்து வருபவர் ராஜாமனி (47) சொந்தமாக கோட்டார் பஜாரில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜீவ் (37) , இவர்களுக்கு சரோஜினி (18) வயதில் ஒரு மகள் நாகர் கோவிலில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். இன்று வீட்டில் துணிகள் துவைத்து அதை காயபோட ராஜீவ் வீட்டின் பின்புறம் உள்ள அசை சம்பியில் கை வைத்தப்போது அதில் மின்சாரம் பாய்ந்துள்ளது. சம்பவ இடத்திலே அவர் துடித்து பரிதாபமாக பலியானார் நீலாவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த அவரது கணவர் ராஜாமணி ஒடி வந்து நீலாவை காப்பாற்ற முயற்சித்த போது அவர் மீதும் மின்சாரம் தாக்கி அவரும் பலியானார் ஒரு குடும்பத்தில் கனவன் மனைவி இருவரும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப் பகுதி முழுவதும் பெரும் சேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து வடசேரி போலிசார் வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி, இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்தில் வந்து பார்த்து சென்றனர். குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழையும் இருந்து வருவது குறிப்பிடதக்கது.