மயிலாடுதுறையில் முஸ்லீம்களையும், இஸ்லாமியர் மார்க்கத்தையும் தவறாக சித்தரித்து கருத்துகளை வாட்ஸ்அப் குருப்பில் தனிநபர் பரப்பி வருவதாக குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.எம்.பாசித் தலைமையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இஸ்லாமியர்கள்
புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் மயிலாடுதுறையில் உள்ள மயிலை மகத்துவம் என்கிற வாட்ஸ்அப் குருப்பில் (பாரதமே!! விழித்தெழு(+91-9994203266) என்ற எண்ணிலிருந்து தொடர்ச்சியாக முஸ்லீம்களையும், இஸ்லாமியர் மார்க்கத்தையும் தவறாக சித்தரித்து கருத்துகளை பரப்பி வருகிறார். அந்த மயிலை மகத்துவம் வாட்ஸ்அப் குழுமத்தில் அனைத்து சமுதாய மக்களும் உள்ளனர். இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் மத மோதலை உருவாக்கும் விதமாக பல்வேறு கருத்துகளை பரப்பி வருகிறார். மேலும், சாதாரண இந்துக்கள் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் அமைந்து வருகிறது. அது மட்டுமில்லாமல், ஆதாரமற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான செய்திகளையும், இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தியும், மோசமான வார்த்தைகளால் தொடர்ச்சியாக பரப்பி வருகிறார். எனவே மத மோதல்களை உருவாக்கும் அந்த நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மற்றும் தண்டனையும் பெற ஆவண செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.