கோவை ஏப்: 16
40 வயது மதிக்கத்தக்க மேற்கு வங்கத்தை சேர்ந்த ரஜினி சிங் என்ற நபர் கடந்த 3 நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த போது குடல் வீங்கி செயல் இழந்து மலம் கழிக்காமல் வயிறு வீங்கி இருப்பதையும் அவருக்கு உடனடியாக அவசர அறுவை சிகிச்சை தேவை எனவும் அறிவுறுத்தப்பட்டது.
அவருக்கு உடனடியாக அவசர அறுவை சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர்கள் கார்த்திகேயன் , முருகேசன் மற்றும் சங்கமித்ரா ,மயக்க மருத்துவர் குழு ஜெயக்குமார் , நவாஸ் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ,செவிலியர்கள் ஆதி லட்சுமி ,தனலட்சுமி ஆகியோர் கொண்ட குழு அறுவை சிகிச்சை செய்தனர்.
மலக்குடலில் 5 cm அளவுக்கு ஓட்டை ஏற்பட்டு வயிற்றில் சீழ் இருப்பது கண்டு பிடிக்க பட்டது. மேலும் அந்த ஓட்டையை சரிசெய்த பின் மலக்குடல் வயிற்றில் வெளியே (end simoid colostomy )வைத்து தைக்கப்பட்டது. சுமார் 4.30 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி தற்போது நலமுடன் உள்ளார்.
சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.5 லட்சம் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சை நமது அரசு மருத்தவ மனையில் இலவசமாக செய்யப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் மருத்துவ மனை கண்காணிப்பாளர் திரு டாக்டர் ராஜா அவர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்த அனைத்து மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர் .